இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் பழைமைச் சிறப்புமிக்க மரபுரீதியான கலைவளர் நிறுவனமாக நோர்வே நுண்கலை மன்றமானது, 2010ஆம் ஆண்டு மாசி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. நோர்வே நுண்கலை மன்றமானது தமிழருட்பட்ட நோர்வேவாழ் மக்களிடையே மரபுரீதியான  கலை, பண்பாட்டு விழுமியங்களைத் தரமோடு வெளிக்கொணருவதற்கான வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது. அவ்வழியில் கலைக்கல்வி, பயிற்சிகளில் தரத்தைப் பேணும் வகையில் கலைப்பாடங்களுக்கான பாடத்திட்டங்களைத் தயாரித்தல்,  தேர்வுகளை நடத்துதல், நோர்வேஜிய அதிகாரமையத்துடன் இணைந்து பணியாற்றுதல் என நோர்வே நுண்கலை மன்றத்தின் செயற்பாடுகள் விரிந்து செல்கின்றன.
இச்செயற்பாடுகளின் முதற்கட்டமாகக் கலைப்பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் எம்மால் தயாரிக்கப்பட்டுள்ளன. நோர்வே நாட்டில் கலைப்பாடங்களைப் பல்லாண்டுகளாகக் கற்பித்த அனுபவமும், ஆளுமையும் கொண்ட ஆசிரியர்களின் ஒத்துழைப்பில் உருவாகியுள்ள இப்பாடத்திட்டங்கள் விரைவாகவும், தரமாகவும் உருவாகுவதற்குப் பலவழிகளிலும் தம் மேலான பங்களிப்புக்களை நல்கிய அனைவரையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைவுகூருகின்றேன்.

எமது எதிர்பார்ப்புக்கும் மேலாக எம்மோடிணைந்து பணிபுரியும் நோர்வோழ் கலைப்புலமையாளர்கள், கலையார்வலர்கள் அனைவரதும் தொடர் ஒத்துழைப்பை நாடிநிற்கும்

பேராசிரியர், முனைவர் இளங்கோ பாலசிங்கம்
நிர்வாகப் பொறுப்பாளர்
நோர்வே நுண்கலை மன்றம். 29.08.2010.