நுண்கலை மன்ற நிர்வாகமும் அதன் செயற்பாடுகளும் 

 • நிர்வாகக்குழு ஏழு அங்கத்தவர்களைக் கொண்டதாக அமைதல்.

 • நிர்வாகம் மற்றும் ஆலோசனைக்குழுவில் இடம் பெறுபவர்கள் மன்றத்தில் அங்கத்தவராக இருத்தல்.

 • நிர்வாக மாற்றமானது இரண்டு வருடத்துக்கு ஒரு தடவை வரிசைப்படி முறையே மூன்று அல்லது நான்கு அங்கத்தவர்கள் மாற்றமடைந்து புதியவர்கள் உள்ளே வருதல்.

 • நிர்வாகத்தில் இருந்து ஓய்வு பெறும் அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் குழுவானது  நிர்வாகத்தெரிவுக்குப் பொறுப்பாகச் செயற்படல்.

 • நிர்வாகக்குழுவைப் பொதுச்சபையின் அங்கத்தவர்கள் தெரிவு செய்தல்.

  நிர்வாகப் பதவிகளை நிர்வாகக்குழு தெரிவு செய்தல்.

 • கலைக்கூடங்களை நடத்துபவர்கள், கலைப் பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்கள்  நிர்வாகத்தில் அங்கம் வகித்தலாகாது.

 • முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்போது குறைந்தது ஐந்து நிர்வாக உறுப்பினர்களாவது சமூகமளித்திருத்தல்.

 • வருடத்தில் குறைந்தது மூன்று நிர்வாகக் கூட்டமும் அதில் ஒன்று ஆலோசனைக் குழுவுடனுமாக நடத்தல்.

 • வருடத்தில் குறைந்தது ஒரு பொதுக்கூட்டம் கூட்டப்படல்.

 • குறைபட்சம் 14 நாட்களுக்கு முன்னதாகப் பொதுக்கூட்ட அழைப்பு விடுக்கப்படல்.

 • மூன்றில் இரண்டு பகுதி அங்கத்தவர்கள் கோரும் பட்சத்தில் பிரத்தியேகப் பொதுக் கூட்டம் ஒரு மாதத்திற்குள் கூட்டப்படல்.

 • நோர்வே நுண்கலை மன்றம் செயலிழந்து போகும் பட்சத்தில் மன்றத்தின் நிதி மற்றும் உடமைகளை நோர்வே நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமையக் கையாளுதல்.