• பரீட்சையும் விண்ணப்பமும் 2020


  சர்வதேச தமிழ்நுண்கலைப் படைப்பாற்றல் மையதினால் நடாத்தப்படும் 2020 ம் ஆண்டுக்கான 
  கலைப் பாடப்பரீட்சைகள்

  விண்ணப்பத்திகதி


  31.01.2020
   
  பரீட்சைத்திகதிகள்
   
  29.02.2020 எழுத்துப் பரீட்சையும்,
  25.04.2020 - 26.04.2020 செய்முறைப்பரீட்சையும் நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

  விண்ணப்பப்படிவம் தொடர்புகளுக்கு;- 475 07 328

 • இளையோர்களுடனான கலந்துரையாடல்


  நோர்வே நுண்கலை மன்றத்தின் இளையோர்களுடனான கலந்துரையாடலில் கலந்து
  கொண்டு மன்றத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களையும்
  பங்களிப்புகளையும் வழங்கி சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன்
  அழைக்கின்றோம்.

  நோக்கம்: மன்றத்தின் செயற்பாடுகளில் இளையோர்களை இணைத்தல்


  காலம்: 20.10.2016 வியாழக்கிழமை
  நேரம்: 18:30
  இடம்: Linderud skole, Statsråds Mathiesens vei 27, 0594 Oslo
  தங்கள் வருகையை மின்னஞ்சல்(Email: post@norkalai.no))
  அல்லது குறுந்தகவல் (SMS) 467 75 367 மூலம் உறுதிப்படுத்தவும்.
   
 • கருநாடக இசை பாடப்புத்தகம்


  தென்னிந்திய, ஈழத்தமிழர் கலைகளை இளையதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு
  பண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்
  தந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது
  அவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்
  உருவாக்கப் பட்டுள்ளது.

  தொடர்புகளுக்கு;- 450 76 753

 • பரதநாட்டியம் பாடப்புத்தகம்


  , ஈழத்தமிழர் கலைகளை இளை
  தென்னிந்தியயதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு
  பண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்
  தந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது
  அவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்
  உருவாக்கப் பட்டுள்ளது.

  தொடர்புகளுக்கு;- 450 76 753

அமைச்சருடனான சந்திப்பு


பல்லாண்டுகாலமாகக் கலைப்பாடங்களைக் கற்றுவரும் தமிழ் மாணவர்கள் பயன் பெறத்தக்க வகையில், நோர்வேஜிய உயர்தரத் தேர்வுகளில் தற்போது பிரத்தியேகமாக நடைபெறும் மொழித் தேர்வுகளுடன் தமிழர்தம் கலைப்பாடங்களையும் இணைப்பதற்கான

முன்னகர்வினை நோர்வே நுண்கலை மன்றமானது ஆரம்பித்துள்ளது. அவ்வகையில் கடந்த 13.10.2014 இல் நடைபெற்ற நோர்வேஜிய அறிவியற்றுறை அமைச்சருடனான சந்திப்பு.

இடமிருந்து வலம்:

Birgitte Jordahl, அறிவியற்றுறை அமைச்சருக்கான அரச செயலர். Torbjørn Røe Isaksen, அறிவியற்றுறை அமைச்சர். பேராசிரியர் இளங்கோ பாலசிங்கம், பொறுப்பாளர், நோர்வே நுண்கலை மன்றம். நிர்மலன் செல்வராஜா, தலைமை நிருவாகப் பொறுப்பாளர், அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம். சுதர்சன் நடராஜா, தொலைநோக்குச் சிந்தனை-புத்துருவாக்க சிந்தனையாளர். சிவா வடிவேலு, ஒஸ்லோ பகுதிப் பொறுப்பாளர், தமிழீழ மக்களவை. இச்சந்திப்பில் கலந்துகொள்ளவிருந்த நோர்வே நுண்கலை மன்ற ஆலோசகர்குழு உறுப்பினரான திருமதி கல்யாணி தயாபரன் தவிர்க்க முடியாத காரணத்தால் பங்குகொள்ளவில்லை.