|
கடந்த 23.03.2010 செவ்வாய்க்கிழமை Stovner videregående skole ல் 18.00 தொடக்கம் 22.00 மணிவரையில் நோர்வே கலைப்பாட ஆசிரியர்களால் கலைப்பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டது
|
|
Read more...
|
|
|
தேர்வுகள் பற்றிய தகவல்கள் |
|
1. எழுத்துத் தேர்வு
அ. மூன்றாம் தரத்திலிருந்தே தேர்வுகள் ஆரம்பமாகும்.
ஆ. மூன்றாந்தரத்துக்கான தேர்வானது, பல்விடைத் தெரிவுக் கேள்விக்கொத்தைக் கொண்டதாக அமையும்.
இ. நான்காம் தரத்திலிருந்து தரப்பட்ட விடைகளிலிருந்து பதிலைத் தெரிவு செய்யும் வகையான கேள்விகளுடன் மேலதிகமாக எழுதுதல், விளங்கப்படுத்தல் முதலான பகுதிகளும் தேர்வுகளில் இடம்பெறும்.
ஈ. எழுதுதல், விளங்கப்படுத்தல் முதலான பகுதிகளுக்கு 40% புள்ளிகளும், கேள்விகளுக்கான பதிலைத் தரப்பட்ட விடைகளிலிருந்து தெரிவுசெய்யும் பகுதிக்கு 60மூ பு
ள்ளிகளும் வழங்கப்படும்.
உ. எழுத்துமுறைத் தேர்வில் சித்தியடைவதற்கு மாணவர்கள் குறைந்தது மூன்றிலிரண்டு பகுதியான 67% புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
ஊ. சித்தி அல்லது சித்தியடையவில்லை என்றவாறே பெறுபேறுகள் அமையும்.
2. செய்முறைத் தேர்வு
அ. செயல்முறைத் தேர்வின் வடிவம் பாடத்திட்டத்தில் தரப்பட்டுள்ளது. அவற்றை அவதானமாகப் படிக்கவும்.
ஆ. மாணவரின் தகுதிநிலைக்கான புள்ளிகளாக 25% புள்ளிகள் வரையில் அவர்தம் கலைப்பாட ஆசிரியர்களால் வழங்கப்படும். இவ்விபரங்கள் பாடத்திட்டத்தில் தரப்பட்டுள்ளன. குறைந்தது ஆசிரியர்தரத் தேர்வில் சித்தியடைந்த அல்லது அதற்குச் சமனான தகுதியுள்ள ஆசிரியர்களினால் வழங்கப்படும் மாணவரின் தகுதிநிலைக்கான புள்ளிகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இ. செய்முறைத் தேர்வில் சித்தியடைவதற்கு மாணவர்கள் குறைந்தது மூன்றிலிரண்டு பகுதியான 67% புள்ளிகளைப் பெறவேண்டும்.
ஈ. சித்தி அல்லது சித்தியடையவில்லை என்றவாறே பெறுபேறுகள் அமையும்.
|
|
நோர்வே நுண்கலை மன்றத்தின் முதலாவது அறிமுகக்கூட்டம் 14.02.2010 ஞாயிற்றுக் கிழமை Manglerud SFO மண்டபத்தில் பேராசிரியர் Dr இளங்கோ பாலசிங்கத்தால் நடாத்தப்பட்டது.
|
|
Read more...
|
|
|
|
|
|
|