| நிர்வாகம் |
|
-நிர்வாகக்குழு ஏழு அங்கத்தவர்களைக் கொண்டதாக அமைதல் வேண்டும்.
-நிர்வாக மாற்றமானது ஏழு பேர் கொண்ட நிர்வாகத்தில் வருடா வருடம் வரிசைப்படி முறையே மூன்று அல்லது நான்கு அங்கத்தவர்கள் மாற்றமடைந்து புதியவர்கள் உள்ளே வருவார்கள்.
-நிர்வாகத்தில் இருந்து ஓய்வு பெறும் அங்கத்தவர்களே இந்தத் தேர்தல் குழுவில் அங்கம் வகிப்பார்கள். -தேர்தல் குழு மூலம் தேர்தல நடாத்தப்படும்.
-நிர்வாகக்குழுவை பொதுச்சபையின் அங்கத்தவர்களே தெரிவு செய்வார்கள்.பதவிகளை நிர்வாகக்குழு தெரிவு செய்யும்.-நிர்வாகத்தில் கலைக்கூடங்களை நடத்துபவர்கள் அங்கம் வகித்தல் இயலாது.
-முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்போது குறைந்தது ஐந்து உறுப்பினர்களாவது சமூகமளித்திருக்க வேண்டும்.
-நிர்வாகத்தில் கலைப் பாடங்களை போதிக்கும் ஆசிரியர்கள் அங்கம் வகித்தல் இயலாது. ஆனால் இவர்கள் ஆலோனைக் குழுவில் இடம் பெறலாம்.
-கலைஞர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படும்.
-ஆலோசனைக்குழுவானது நிர்வாகத்தினருக்கு ஆலோசனை வழங்கும்.
-வருடத்தில் குறைந்நபட்சம் மூன்று நிர்வாகக் கூட்டம் கூட்டப்படும். அதில் குறைந்தபட்சம் ஆலோசனைக் குழுவுடனும் ஒரு கூட்டமாவது கூட்டப்படல் வேண்டும்.
-வருடத்தில் ஓரு பொதுக்கூட்டம் கூட்டப்படும்.
-குறைபட்சம் ஓரு கிழமைக்கு முன்பாகப் பொதுக்கூட்ட அழைப்பு விடுக்கப்பட வேண்டும். |